அரசு புறம்போக்காக குடியிருப்பு இடம் மாற்றம் பட்டா கேட்டு வீதியில் திரண்ட பொதுமக்கள்

என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருநாகேஸ்வரம் மேலவீதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, திருநாகேஸ்வரம், சன்னாபுரம் கிராமத்தில் உள்ள உப்பிலியப்பன் கோவில் நான்கு வீதிகள் உட்பட 20க்கும் மேற்பட்ட வீதிகளில், 2,000 குடும்பங்கள் வசிக்கின்றன.

நத்தம் மனைகளாக இருந்த அந்த இடங்கள், கடந்த 1988ல் வருவாய்த்துறையினர் அளவீடு செய்யும் போது, அரசு புறம்போக்கு நிலம் என ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், 2,000 குடும்பங்களுக்கும் பட்டா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்காக, பல ஆண்டுகளாக மனு அளித்த மக்களிடம், அதையே காரணம் காட்டி பட்டா வழங்க மறுத்து வருகின்றனர். இதனால், ஆத்திரமடைந்த நுாற்றுக்கணக்கான பொதுமக்கள், திருநாகேஸ்வரம், சன்னாபுரம் குடியிருப்பு நலச்சங்க தலைவர் ஆறுமுகம் தலைமையில், நேற்று போராட்டத்தில் குதித்தனர்.

ஆவணப் பதிவில் ஏற்பட்ட குளறுபடியை நீக்க வேண்டும். கிராம ஆவணத்தில் நத்தம் என்று குறிப்பிட்டுள்ளதால், அதன்படி பட்டா வழங்க வேண்டும்

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரன், திருவிடைமருதுார் டி.எஸ்.பி., ஜாபர் சித்திக் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில், இரண்டு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.