ஜார்கண்டில் கிறிஸ்தவ மதவெறி

இடதுசாரி பயங்கரவாதத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஜார்கண்டில் உள்ள கும்லா மாவட்டம், பல ஆண்டுகளாக கிறிஸ்தவ மிஷனரிகளால் பரவலான மத மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் இங்கு செயல்படும் கிறிஸ்தவ மிஷனரிகள் ஏழை மற்றும் பட்டியலியோன பழங்குடியின மக்களை மதமாற்றம் செய்தன. எங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் பலரை அச்சுறுத்தி கிறித்துவத்திற்கு மதமாற்றம் செய்தன. உதாரணமாக, மதமாற்ற கும்பல்களின் அச்சுறுத்தல் காரணமாக, ஜார்கண்டில் உள்ள கடோலி தொகுதியில் வசிக்கும் 55 குடும்பங்களில், சுமார் 30 குடும்பங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளன. அதில் ஒரு உதாரணமாக, சாலிக் கோப் என்பவரின் குடும்பம் 6 மாதங்களாக மத மாற்ற கோரிக்கையை ஏற்காததால் கிறிஸ்தவ கிராம மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டதுடன் கிராம கிணற்றைப் பயன்படுத்தவும், குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் தடை விதித்துள்ளனர். அவர்களுக்கு தற்போதுவரை தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. அங்குள்ள பல ஹிந்துக் குடும்பங்கள் மாட்டிறைச்சியை உட்கொள்ள நிர்பந்திக்கப்படுகின்றனர். ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த அமைப்புகள் ஜார்க்கண்டின் கும்லா நகரில் பல ஆண்டுகளாக வெளிப்படையாக ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வருகின்றன.