சித்திரைத் திருவிழாத் தடை

கோயில் நகரமான மதுரையின் சிறப்புகளுள் முக்கியமானது சித்திரைத் திருவிழா. அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் புறப்பட்டு எதிர் சேவை சாதித்து வைகையாற்றில் இறங்கும் நிகழ்வுக்கும் மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டத்தை உள்ளடக்கிய சித்திரை திருவிழாவிற்கும் கொரோனாவை காரணம் கட்டி இந்த ஆண்டும் அரசு தடை விதித்திருப்பது அம்மாவட்ட மக்களிடையே கொந்தளிப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் கூட்டம் போடும்போதும் பிற மத விழாக்கள் நடக்கும் போதும் வைரஸ் பரவுவது தெரியவில்லையா, என்றும், கோயில்களை மூடி அதனை நம்பியிருக்கும் குடும்பங்களை வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்க விடுவது முறையா என்றும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தியேட்டர்கள், டாஸ்மாக்கை திறந்து வைத்து விட்டு, தேர்தலின் போது காசு கொடுத்து கூட்டம் கூட்டியவர்களுக்கு தற்போது தான் கொரோனா கண்ணுக்கு தெரிகிறதா என்றும் அனைத்து அரசியல் கட்சிகளையும் மக்கள் விமர்சிக்கின்றனர். இந்து முன்னணி அமைப்பின் சார்பில் ‘எத்தனை தடை போட்டாலும் இந்த ஆண்டு இந்துக்களின் பாரம்பரிய திருவிழாவான மதுரை சித்திரை திருவிழா நடந்தே தீரும்’ என்று நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.