சீன அணுசக்தி அமெரிக்கா கவலை

‘ப்ரூக்கிங்ஸ் கல்வி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற ஒரு இணைய வழி கருத்தரங்கில் பேசிய அமெரிக்க அணுசக்தித்துறை தளபதி ரிச்சர்ட், ‘சீனா அதன் அணுசக்தி திறன், ஆயுதங்களை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இது உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். அணு ஆயுதங்கள் தொடர்பாக ரஷ்யா மற்றும் சீனாவுடன் தொடர்ந்து பேசி பரஸ்பர வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதற்கு அமெரிக்கா முயன்று வருகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ், சின்ஜியாங்கில் மனித உரிமை மீறல்கள், ஹாங்காங்கின் சிறப்பு அந்தஸ்து அத்துமீறல், பெய்ஜிங்கின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், தொற்றுநோய் தொடர்பான வெளிப்படைத்தன்மை இல்லாமை, உலகின் பல்வேறு பகுதிகளில் சீனாவின் இராணுவ ஆக்கிரமிப்பு போன்ற விஷயங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துவிட்டன’ என தெரிவித்தார்.