கொரோனா படுக்கை விவரங்கள் இணையத்தில்

தமிழ்நாட்டில் உள்ள கொரோனா சிகிச்சை அளிக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள இடங்களை பற்றி தெரிந்துகொள்ள, தமிழ்நாடு அரசு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் வசதியில்லாத சாதாரண படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு சாராத படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகள். ஆகியவற்றின் நிலவரங்களை https://tncovidbeds.tnega.org/ என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்துகொள்ள முடியும்.