உலக அரங்கில் சீனாவிற்கு அவமானம்

பிப்ரவரி 15 அன்று, அமெரிக்க குடியரசுக் கட்சியின் பிரதிநிதி மைக்கேல் வால்ட்ஸ், 2022ல்  பெய்ஜிங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்குமாறு அமெரிக்காவை வலியுறுத்தும் தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார். மிருகத்தனமான சர்வாதிகாரம் நடத்தும் ஒரு நாட்டில், இது போன்ற ஒரு நிகழ்வைக் கொண்டாட அமெரிக்கா தனது விளையாட்டு வீரர்களை அனுப்பக்கூடாது. ஒலிம்பிக்கை நடத்த சீனாவை அனுமதிப்பது ஒழுக்கக்கேடானது, நெறிமுறையற்றது, தவறானது. இந்த ஒலிம்பிக்கை நடத்துவதால் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆதாயம் பெறும். இந்த குளிர்கால ஒலிம்பிக்கை வேறு ஒரு நாட்டுக்கு மாற்ற வேண்டும். என்று அவர் அந்த தீர்மானத்தில் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக பல நாடுகளை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.