கொரோனாவை ஆயுதமாக்கிய சீனா

கொரோனாவை ஆயுதமாக மாற்ற 2015-ம் ஆண்டே  சீனா ரகசிய ஆலோசனை நடத்தியதாக  “தி ஆஸ்திரேலியன்’ என்ற நாளிதழ் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மூன்றாவது உலகப்போர் உயிரியல் ஆயுதங்களால் நிகழக்கூடும். இதன் மூலம் எதிரி நாட்டின் மருத்துவத்துறையை செயலிழக்க வைக்க முடியும் என்று சீன விஞ்ஞானிகள் விவாதித்துள்ளனர் என்றும் இது குறித்த ஆவணம் தங்களுக்கு கிடைத்திருப்பதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது. கொரோனாவை சீனாதான் பரப்பியதாக உலக நாடுகள் அனைத்தும் நம்பி வரும் சூழலில், இந்த பத்திரிகை செய்தி உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, பிரபல சீன வைராலஜிஸ்ட் நிபுனரான, ‘யான்’  ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘சீன அதிகாரிகளுக்கு இந்த கொடிய வைரஸ், பரவலை குறித்து முன்பே தெரியும் என்று நான் நம்புகிறேன். கொரோனா வைரஸின் வீரியத்தை சீன அரசாங்கம் டிசம்பர் மாதம் முதலே நன்கு உணர்ந்து இருந்தது. ஆனால் அதனை உலக நாடுகளுக்கு தெரியாமல் பார்த்து கொண்டது. பல சீன விஞ்ஞானிகள் வைரஸ் குறித்து பொதுமக்களை எச்சரிக்க முயன்றனர். ஆனால் அவர்களின் குரல்களை சீன அரசு நசுக்கிவிட்டது’ என தெரிவித்துள்ளார். உண்மையை வெளியே கூறிய சீன வைராலஜிஸ்ட் யான் நிலைமை என்னவென்பது தற்பொழுது வரை மர்மமாக உள்ளது. மேலும், கொரோனா பற்றி செய்தி வெளியிட்டதற்கு சீன பெண் பத்திரிக்கையாளர் ஜாங் ஜானுக்கு 5 ஆண்டுகள் கொடூர சிறைத் தண்டனையை சீனா வழங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.