மஹுவா மொய்த்ரா மீது வழக்குப்பதிவு

ஜாதி மற்றும் இன சமூகத்தை இழிவுபடுத்தியதாக அசாமில் திருணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவசாகர் பிரிவின் தலைவர் பிரணாப் சேத்தியா அளித்துள்ள அந்த புகாரில், “நாடாளுமன்றத்தில் தவிர்ப்பப்பட வேண்டிய வார்த்தைகளுக்கு மாற்றாக எனது முதல் டுவிட்டர் வார்த்தையாக பாலியல் துன்புறுத்தல் என்ற வார்த்தைக்கு மாற்றாக ‘மிஸ்டர் கோகோய்’ என்ற வார்த்தை பயன்படும்” என மஹுவா டுவீட் செய்துள்ளார். மஹுவா மொய்த்ராவின் டுவிட்டர் கருத்து, பாலியல் துன்புறுத்தல் என்ற வார்த்தையை வேண்டுமென்றே மிஸ்டர். கோகோய் என்ற வார்த்தையுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. கோகோய் என்ற குடும்பப்பெயர் மாநிலத்தின் அஹோம் சமூகத்தில் மிகவும் பொதுவானது. இது அஸ்ஸாமின் இன சமூகத்தை அவதூறாகப் புறக்கணிக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டுள்ளது. எனவே அஹோம் சமூகத்தின் புனிதம், ஒருமைப்பாடு மற்றும் மரியாதையைப் பாதுகாக்கவும், மொஹுவா மொய்த்ரா மீது நடவடிக்கை எடுத்து அவரை நீதியின் முன் நிறுத்த வேண்டும்” என கோரியுள்ளார். இதேபோல, தேசிய விருது பெற்ற திரைப்பட விமர்சகர் உத்பால் போர்புஜாரி, மொய்த்ராவின் அவமதிப்புக் கருத்துக்களைப் கண்டித்துள்ளார்.