கல்கத்தா சாமரிட்டன்ஸ் – மிஷ ‘நரிகள்’

தி கல்கத்தா சாமரிட்டன்ஸ் என்ற தொண்டு நிறுவனம், அமெரிக்காவிலுள்ள ஓக் பௌண்டேஷன், கனடாவை சேர்ந்த கனடியன் யூனியன் ஆப் பப்ளிக் எம்பிளாயிஸ் (CUPE) போன்ற அமைப்புகளிடம் இருந்தும் 4.84 கோடி ருபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. இந்த அமைப்பு ஏற்கனவே, பாரதத்தில் விவசாய சட்டங்களுக்கு எதிராக கலவரங்களை தூண்ட ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது. 1971ல் விஜயன், பிரமிளா பாவமணி என்ற தம்பதியினரால், ‘கல்கத்தா சமாரிட்டன்ஸ்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இவர்கள் 1978ல் ‘அருணோதய் மிட்வே ஹோம்’என்ற அமைப்பையும், ‘கல்கத்தா இம்மானுவேல் ஸ்கூல்’ என்ற ஒன்றையும் திறந்தனர். 1985ல் ‘இமானுவேல் மினிஸ்ட்ரீஸ் கல்கத்தா’ (EMC) என்ற அமைப்பை மேற்கண்ட அமைப்புகளின் மொத்த வடிவமாக உருவாக்கினார்கள். 1974ல் ஸ்விட்சர்லாந்தில் நடந்த ஒரு உலக சுவிசேஷ மாநாட்டில் இமானுவேல் மினிஸ்ட்ரிஸ் கொல்கத்தா அமைப்பு கிறிஸ்தவத்தை பரப்புவதில் முன்னணியில் இருக்கிறது என பாராட்டப்பட்டது. மேலும், பாரதத்தில் தொண்டு செய்வதாக கூறிக்கொண்டு கிறிஸ்துவத்தை பரப்ப வந்த தெராசாவுக்கு, பிரமிளா பாவமணி நெருக்கமானவர் என்பது கூடுதல் தகவல். இந்த அமைப்பு குறித்து, எப்.சி.ஆர்.ஏ விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), உள்துறை அமைச்சகத்திற்கு புகார் ஆளித்துள்ளது. இவர்கள் எப்.சி.ஆர்.ஏ விதிமீறல்களில் ஈடுபட்டது மட்டுமில்லாமல், விவசாய சட்டத்திற்கெதிராகவும் செயல்பட்டுள்ளனர் என்பதால், இந்த அமைப்பினர் மீது தேசிய பாதுகாப்பு என்ற கோணத்திலும் உள்துறை அமைச்சகம் விசாரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.