பா.ஜ.க வெற்றி, பிரசாந்த் கிஷோர் கணிப்பு

சமீபத்தில் சில பத்திரிகையாளர்களுக்கும் தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோருக்கும் இடையிலான ஒரு தனிப்பட்ட கிளப்ஹவுஸ் உரையாடலின் ஆடியோ கிளிப்புகள் டிவிட்டரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில், தங்கள் நிறுவனமான ஐ-பேக் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில், மேற்கு வங்கத்தில், ஆளும் திருணமூல் கட்சி தேர்தலில் தோல்வியை சந்திக்கும், அதற்கு முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் வகையிலான அவர்களின் தேர்தல் அணுகுமுறையே காரணமாக இருக்கும். தங்கள் கருத்துக் கணிப்பில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள், பா.ஜ.க அதிக இடங்கள் பெற்று ஆட்சியமைக்கும் என்றும் கூறியுள்ளார்கள். மேலும், மேற்கு வங்கத்தில் உள்ள பட்டியலினத்தவர்கள், ஹிந்தி பேசும் மக்கள் என அனைவரும் பா.ஜ.கவுக்கு ஆதரவாகவே உள்ளனர். காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி சுமார் 15 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெறுவார்கள் என்றும் பேசியுள்ளார். முன்னதாக, பா.ஜ.க 200 இடங்களைப் பெற்று அட்சியமைக்கும் என அதன் தலைவர்கள் கூறியபோது, பா.ஜ.க இரட்டை இலக்கத்தை தாண்டினால், தான் செய்யும் தொழிலையே விட்டுவிடுவதாக பிரசாந்த் கிஷோர் கூறியது நினைவிருக்கலாம்.