திமுக அரசை கண்டித்து பா.ஜ., பட்டியல் அணி போராட்டம்

தமிழகத்தில் உள்ள பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை திமுக அரசு திருப்பி அனுப்பியதை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ., பட்டியல் அணி சார்பில் பிச்சை அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. சென்னை, தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பா.ஜ.,வினர் திமுக அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.