பா.ஜ.க தேர்தல் அறிக்கை

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை, ‘தொலைநோக்கு பத்திரம்’ என்ற பெயரில் வெளியிட்டது. சென்னையில், நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த தேர்தல் அறிக்கை வெளியிட்டார். அதில்,’ ஹிந்து கோயில்களின் நிர்வாகம் தனி வாரியத்திடம் ஒப்படைப்பு. விவசாயத்திற்கு தனி பட்ஜெட். மீனவர்களுக்கு வருடந்தோறும் உதவித்தொகை ரூ. 6,000.ஐ ந்து ஆண்டுக்கு ஆற்றுப் படுகையில் மணல் அள்ள தடை. பூரண மதுவிலக்கு. மகளிருக்கு இரு சக்கர வாகன இலவச ஓட்டுனர் உரிமம். பஞ்சமி நிலங்கள் மீட்டு பட்டியலிட மக்களிடமே திரும்ப வழங்குவது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கியுள்ள 10 சதவீத இட ஒதுக்கீடு. குடும்ப அட்டைதாரர்களுக்கு குடியுரிமை பொருட்கள் இல்லங்களில் நேடியாக வழங்குதல். முன்னாள் ராணுவத்தினரின் குடும்பத்தினர், போர் விதவைகளுக்கும் இலவச பேருந்து பயணச்சீட்டு சலுகை. விதவைகள் நலவாரியம். விதவைகளுக்கான ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்குதல். தாய் மொழியில் மருத்துவக்கல்வியும் தொழிற்கல்வியும் வழங்குதல். ஆலய அர்ச்சகர்கள் குடும்பங்களுக்கு திருமண உதவித்தொகை. தினக்கூலியாக பணியாற்றும் கோயில் ஊழியர்கள் பணி நிரந்தம். உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் மொழி’ போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.