வங்கி சேவை புதிய விதி அமல்

வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட நிதிச் சேவை நிறுவனங்கள், தொலைபேசி இணைப்புகள் போன்ற பல்வேறு சேவை நிறுவனங்கள் அதற்கான பணத்தை கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து தவணை முறையில் பெறுகின்றன. இந்த தவணைகள் மாதந்தோறும், அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து தன்னிச்சையாக பிடித்தம் செய்யப்படும். ஆட்டோ பேமன்ட் எனப்படும் இந்த நடைமுறையில், வாடிக்கையாளரின் நலனைக் கருதி, புதிய கட்டுப்பாட்டை, மத்திய ரிசர்வ் வங்கி இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 5,000 ரூபாய்க்கு மேற்பட்ட அனைத்து பணப் பரிவர்த்தனைகளுக்கும் வாடிக்கையாளரின் முன் ஒப்புதலைப் பெற்ற பிறகே, அவரது கணக்கில் இருந்து பணப்பிடித்தம் செய்ய முடியும். தவணை பிடித்தத்திற்கான கெடு முடிய, ஐந்து நாட்கள் உள்ள போது, வாடிக்கையாளருக்கு தகவல் அனுப்பி அவர்களின் அனுமதி பெற்ற பிறகே பணம் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.