விண்வெளிக்குச் செல்லும் பகவத் கீதை

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம், மாணவர்களிடையே விண்வெளி ஆர்வத்தை மேம்படுத்த, சதீஷ் தவான் செயற்கைக்கோள் (எஸ்.டி சேட்) எனப்படும் நானோசாடிலைட் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, இஸ்ரோ மூலம் பிப்ரவரி இறுதியில் இது விண்ணில் செலுத்தப்படும். விண்வெளிக் கதிர்வீச்சு, காந்த மண்டலம் போன்றவற்றை ஆராயும் இந்த செயற்கைக்கோள், பகவத்கீதை, பிரதமர் மோடியின் புகைப்படம், 25,000 நபர்களின் பெயர்களையும் விண்வெளிக்குக் கொண்டு செல்லும். இந்த செயற்கைக்கோள் பாரதத்திலேயே முழுமையாக உருவாக்கப் பட்டுள்ளது. இதன்மீது ‘ஆத்ம நிர்பர் மிஷன்’ என பொறிக்கப்பட்டிருக்கும் என அந்நிறுவன தலைமை நிர்வாகி டாக்டர் ஸ்ரீமதி கேசன் தெரிவித்தார்.