ஹிந்துக்கள் மீது தாக்குதல்

நமது அண்டை நாடான வங்க தேசத்தில் உள்ள சிறுபான்மையினரான ஹிந்துக்களால் அங்கு துர்கா பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. எனினும், அங்குள்ள முஸ்லிம்கள் இதனை பொறுத்துக்கொள்ல முடியாமல் பல்வேறு இடங்களில் சிலைகள் உடைப்பு, ஹிந்துக்கள் மீது தாக்குதல் என வன்முறைகளில் ஈடுபட்டனர். வங்கதேசத்தில் உள்ள கொமில்லா, ஹாஜிகன்ஜ், பன்ஷ்கலி, பெகுலா உள்ளிட்ட பல இடங்களில் இந்த வன்முறைகள் நடைபெற்றுள்ளன.

இந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களைத் தடுக்கும்பொருட்டு 22 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா உறுதியளித்துள்ளார். பாரதமும் இது குறித்த தன் கண்டனத்தை தெரிவித்துள்ளது.