ஆசியாவின் முதல் விரைவுச் சாலை

டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், மும்பை ஆகிய மாநிலங்களை இணைக்கும் டெல்லி மும்பை விரைவுச் சாலைப் பணிகளின் முன்னேற்றத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் ஆய்வு செய்தார்.

1,380 கிலோமீட்டர் நீளமுள்ள டெல்லி மும்பை விரைவு சாலை 98,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு வருகிகிறது. இது பாரத்த்திலேயே மிக நீளமான விரைவுச் சாலை. டெல்லி மும்பை இடையே 12.5 மணி நேரத்தில் பயணிக்க முடியும். இச்சாலை பல்வேறு பொருளாதார மண்டலங்களின் இணைப்பை மேம்படுத்தும்.

பிரதமரின் ‘புதிய இந்தியா’ என்ற தொலைநோக்கு திட்டத்தின் கீழ், கடந்த 2019, மார்ச் 9ல் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்ட, இந்த சாலையால், 320 மில்லியன் லிட்டருக்கும் அதிகமான எரிபொருளை சேமிக்க முடியும், 850 மில்லியன் கிலோ கர்பன் உமிழ்வை குறைக்க முடியும். இச்சலை திட்டத்தின் ஒரு பகுதியாக, 20 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள், செடிகள் நடப்பட உள்ளன.

வன விலங்குகள் சாலையை கடக்க ஏதுவாக அவைகளுக்கான மேம்பாலங்களைக் கொண்ட ஆசியாவிலேயே முதன்மையானதும் உலகின் இரண்டாவது நெடுஞ்சாலையாக இது இருக்கும். இத்திட்டத்தால் ஆயிரக்கணக்கான  பொறியாளர்கள், ஏராளமான பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துதுள்ளது. இச்சாலையில், பெட்ரோல் பங்குகள், மோட்டல்கள், ஓய்விடங்கள், ஹெலிபேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட உள்ளன.