மற்றொரு காஷ்மீரா?

சமீபத்தில் மும்பை, பா.ஜ.க தலைவர் மங்கல் பிரபாத் லோதா மகாராஷ்டிர சட்டமன்றத்தில் பேசும்போது, ‘மலாட் மல்வானி பிராந்திய சட்டமன்ற வாக்காளர் பட்டியலைப் பார்க்கும்போது அங்கு ஹிந்து வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 15,000 குறைந்துள்ளது. அதே சமயம் அங்கு முஸ்லிம் வாக்காளர்கள் 12,000 ஆக உயர்ந்துள்ளது. மல்வானி, செட்டா நகரில் உள்ள 106 குடும்பங்களில் 52க்கும் குறைவான குடும்பங்களே தற்போது அங்கு எஞ்சியுள்ளன. மற்றவர்கள் அச்சத்துடன் அந்த பகுதியில் இருந்து வெளியேறிவிட்டனர். அப்பகுதியில் ஸ்ரீராம ஜென்மபூமி நிதி வசூலில் ஈடுபட்டிருந்தவர்கள் காவலர்களால் தாக்கப்பட்டனர். பேனர்கள், சுவரொட்டிகளை கிழித்து எறிந்தனர். மூன்று வி.எச்.பி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜம்மு, மேற்கு வங்கம், அசாம் போன்ற இடங்களில் நடந்தது போன்றே மால்வானியிலும் முஸ்லிம் ஆதிக்கத்தை அதிகப்படுத்த மற்ற மதத்தவர்கள் வெளியேற்றப்படுகின்றனர். சட்டவிரோதமாக மற்ற தேசத்தவர்கள் குடியேற்றப்படுகின்றனர். இது முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பிற்கும் இது பெரிய அச்சுறுத்தல்’ என தெரிவித்தார். தமிழகத்திலும் இது போன்ற சில இடங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.