லாவண்யா மரணத்துக்கு நீதிகேட்டு, தமிழகத்தைத் தாண்டி டெல்லி, இலங்கை என பல பகுதிகளில் பல்வேறு ஹிந்து அமைப்புகள், மாணவர் அமைப்புகள், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் போராடி வருகின்றன. இந்நிலையில், லாவண்யாவின் மரணத்துக்கு நீதி கேட்டு, 50க்கும் மேற்பட்ட அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பினர் நேற்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு அறவழியில் போராடிய இளைஞர்களை தமிழக அரசு, காவல்துறையை ஏவி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயகத்தின் குரலை நெறிக்கும் செயல் என தமிழக மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.