வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்தால், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருக்கும் போலியாக பெயர்களை பதிவு செய்பவர்களை எளிதில் அடையாளம் காணலாம், கள்ள ஓட்டுக்களை தடுக்கலாம் என கருதிய மத்திய அரசு, இதற்காக கடந்த 2015ல் நடவடிக்கை எடுத்தது. ஆனால் அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘ஆதார் எண் சேகரிக்க சட்ட திருத்தம் அவசியம்’ என்றது. தேர்தல் கமிஷனும், ‘ஆதார் எண்ணை சேகரிக்க வாக்காளர் பதிவு அதிகாரிக்கு அதிகாரம் வழங்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசிடம் யோசனையை முன்வைத்தது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இதற்கு பதில் அளித்த, மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், ‘இந்த யோசனை மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கிறது. ஆதாரை இணைத்தாலும், வாக்காளர் பட்டியல் தரவுகள் பாதுகாப்பாக இருக்கும். அதை உறுதி செய்ய தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளை எடுத்துள்ளது’ என தெரிவித்தார்.