கலாஷேத்ரா வழக்கில் திருப்பம்

சென்னை, திருவான்மியூரில், மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கலாஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணி நுண்கலை கல்லுாரி உள்ளது. இங்குள்ள விடுதியில் தங்கி 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர், பரதம், இசை உள்ளிட்ட கலைகளை பயின்று வருகின்றனர். அக்கல்லூரியில் பணிபுரிந்த உதவி பேராசியர் ஹரிபத்மன் மற்றும் சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன் ஆகியோர், மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஹரிபத்மன், கைது செய்யப்பட்டு சிறையில் இந்த பாலியல் தொல்லை குற்றச்சாட்டு குறித்து அடையாறு மகளிர் காவல்துறையினர் 162 மாண மாணவியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் பலர், ‘கல்லுாரியில் பாலியல் தொல்லை இல்லை. எங்கள் பேராசிரியர்கள் அன்பானவர்கள், மதிப்புக்குரியவர்கள்’ என வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, நடிகை அபிராமி, ஹரி பத்மனின் மனைவி திவ்யா உள்ளிட்ட பலர், இது பொய் புகார், இத்தனை நாட்களாக எதுவுமே நடக்காதது போல அமைதியாக இருந்துவிட்டு, இப்போது மாணவிகளை தூண்டிவிட்டு இந்த விவகாரத்தை பெரிதாக்குகின்றனர். கல்லூரியில் உள்ள ஒரு சிலர், மாணவிகளை தூண்டிவிடுகின்றனர். பேராசிரியர் ஹரிபத்மன் எங்களுக்கு வகுப்பு எடுத்த வரை எந்த தொல்லையும் கொடுத்ததே இல்லை என கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.