கடமைக்கு ஒரு முன்னுதாரணம்

குஜராத்தைச் சேர்ந்த டாக்டர் ஷில்பா படேலின் தாயார் காந்தா அம்பலால் படேல் , அனைத்தையும்விட கடமைதான் மிக முக்கியம் என அடிக்கடி சொல்லி வந்தார். இந்நிலையில், ஷில்பா கொரோனா மருத்துவப்பணியில் ஈடுபட்டிருக்கும் வேளையில், 77 வயதான அவரின் தாயார் காந்தா அம்பலால்  இயற்கை எய்தினார். இதனையடுத்து தன் தாயின் இறுதி காரியங்களில் கலந்துகொண்டுவிட்டு சில மணி நேரங்களிலேயே மெண்டும் தன் கொரோனா வார்டு மருத்துவப் பணிக்கு திரும்பிவிட்டார் ஷில்பா. இதேபோல, குஜராத்தில் மற்றொரு சம்பவமாக டாக்டர் ராகுல் பர்மர் தனது 67 வயதான தாயார் காந்தா பர்மாரையும் ஏப்ரல் 15ல் வயது தொடர்பான சிக்கல்களால் இழந்தார். கொரோனா நிர்வாகத்திற்கான நோடல் அதிகாரியாக பணியாற்றி வரும் பர்மர் தனது கடமைகளைச் செய்து வருகிறார். தன் தாயின் தகன சடங்குகளை முடித்துவிட்டு உடனே கொரோனா தடுப்புப் பணியில் தன் வேலையைத் தொடர வதோதராவுக்கு திரும்பினார்.