ஒரு அன்பு வேண்டுகோள்

உலகம் சமீபத்தில் எப்போதும் சந்தித்திராத ஒரு பேரழிவை தற்போது அனுபவித்து கொண்டிருக்கிறது. கரோனா வைரஸ் பரவல் மனிதகுலத்திற்கு பெரும் சவாலாக விளங்குகின்றது. இதற்கு எதிரான போராட்டத்தில் நம் நாடு ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. நாம் தயாரித்துள்ள தடுப்பு மருந்துகள் நமக்கு மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிர்க்கும் பெரும் உதவியாக இருக்கின்றது. ஆனால் பெருகி வரும் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கையால் மருத்துவமனைகள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

ஒரு பக்கம் இடப்பற்றாக்குறை மறுபக்கம் ரத்தம் தேவைப்படுவோருக்கு செலுத்த போதுமான அளவு ரத்தம் இல்லாதிருப்பது. இதில் வரும் மே 1 ஆம் தேதியில் இருந்து 18 வயது நிரம்பியவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட இருக்கின்றது. தடுப்பூசி போட்டுக் கொண்டால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரத்ததானம் செய்ய இயலாது. இதன் மூலம் ரத்ததிற்கும் கூடுதலான தட்டுப்பாடு வர வாய்ப்பு இருக்கிறது. எனவே ஆரோக்கியமான உடல் நிலையில் இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் ரத்த தானம் செய்யும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் குழுவின் உதவியுடன்  சின்மயா மிஷன், சேவாபாரதி, உள்ளிட்ட சில சேவை இயக்கங்களின் ஒருங்கிணைப்பில் ஒரு விசேஷ ரத்ததான முகாம் வரும் வெள்ளிக்கிழமை அன்று திருவல்லிக்கேணியில் நடக்கவிருக்கிறது. இதில் கலந்துகொண்டு ரத்ததானம் அளித்து மானுடத்திற்கு எதிரான இந்த கொரோனாவுக்கு எதிரானப் போரில் நம்மாலான பங்கை ஆற்றுவோம்.

இடம்: சத்ய ப்ரமோதா ஹால், 45, சிங்கராச்சாரி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600005. நாள்: 30/4/2021 வெள்ளிக்கிழமை. நேரம்: காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணி வரை.