அரசியல் ஆதாயம் தேடிய தலைவி

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பயிற்சியாளர்கள் மீது பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து 72 மணி நேரத்திற்குள் பதிலளிக்க அளிக்க வேண்டும் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு விளையாட்டு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பிரபல மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், “இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு மிகவும் வேண்டப்பட்ட சில பயிற்சியாளர்கள், பெண் மல்யுத்த வீராங்கணைகளை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கி அவர்களிடம் தவறாக நடந்து கொள்கின்றனர். 2020 டோக்கியோ ஒலிம்பிக் தோல்விக்கு பின்னர், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங், பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார். என்னை ‘கோட்டா சிக்கா’ என்று அழைத்தார் என குற்றம்சாட்டினார். இதையடுத்து டெல்லியில் உள்ள ஜந்தர் மந்திர் பகுதியில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு எதிராக பெண் மல்யுத்த வீராங்கனைகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, கூட்டமைப்பின் நிர்வாகம் களைக்கப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என வீராங்கனைகள் விரும்புவதாக தெரிவித்தார். இதனிடையே, இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதாக கூறிக்கொண்டு அரசியல் ஆதாயம் தேட முயன்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர் பிருந்தா காரத். ஆனால், அங்கு வந்த பிருந்தா காரத்தை, போராட்ட இடத்தை விட்டு வெளியேறுமாறு பஜ்ரங் புனியா கேட்டுக் கொண்டார். மேலும், போராட்டத்திற்கு எதிர்ப்பு அரசியல் வடிவத்தை கொடுக்க நாங்கள் விரும்பவில்லை என்று கூறினார்.