பகவத் கீதை மீது சத்தியப் பிரமாணம்

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாண துணைநிலை ஆளுநராக, பாரதத்தில் பிறந்த அருணா மில்லர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். தற்போதைய தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பிறந்த அருணா மில்லர் சுமார் 51 வருடங்களுக்கு முன் குடும்பத்தோடு அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மேரிலேண்ட் மாகாண துணைநிலை ஆளுநர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கினார். தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து துணைநிலை ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார். இதன் மூலம், மேரிலேண்ட் மாகாணத்தின் துணைநிலை ஆளுநராக பதவியேற்ற பாரதத்தை சேர்ந்த முதல் நபர், முதல் பெண் ஆளுநர், முதல் கருப்பினத்தவர் உள்ளிட்ட பெருமைகளை பெற்றுள்ளார்.