மர்ம நபர் கைது?

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே துளசாபுரம் ஊராட்சி கண்டிவாக்கம் கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விநாயகர் கோயிலில் இருந்த நவக்கிரக சிலைகள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் சிலைகள், விநாயகர் சிலைகள் மற்றும் அருகே உள்ள மர்றொரு கோயிலான லட்சுமி அம்மன் கோயிலில் உள்ள துவாரபாலகர் சிலைகள், சூலம் உள்ளிட்ட 22 சாமி சிலைகளை சேதப்படுத்தப்பட்டிருந்தது. இது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது குறித்து சுங்குவார் சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் சுவாமி சிலைகளை சேதப்படுத்தியது எடையார்பாக்கம் ஊராட்சி மேட்டு காலனி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த 40 வயதான சதிஷ் பிரேம் குமார் என்கிற துளசி என்பர் என அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் அவர்க்கு கடவுள் நம்பிக்கை இல்லை, குடி போதையில் சுவாமி சிலைகளை சேதப்படுத்தியுள்ளார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்ற பல கோயில் இடிப்பு, சுவாமி சிலைகள் உடைப்பு சம்பவங்களில் குடிகாரர், மனநலம் சரியில்லாதவர், கடவுள் நம்பிக்கையற்றவர் என்றே காவல்துறை ஒரு சிலரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளது. இவ்வழக்கிலும் அதேபோல நடைபெற்றுள்ளது, இவர் தான் உண்மை குற்றவாளியா, ஒரே நபர் இத்தனை சிலைகளை குறுகிய நேரத்தில் திட்டமிட்டு உடைத்து தப்பிவிட்டாரா, இவருடன் இருந்தவர்கள் யார், இதன் உண்மை பின்னணி என்ன? என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.