ஜூலையில் வெளியாகும் நிலை மறந்தவன்

பிரபல மலையாள திரைப்பட நடிகர் பகத் ஃபாசில், நஸ்ரியா, கௌதம் வாசுதேவ் மேனன், திலீஷ் போத்தன் உட்பட பலர் நடித்த மலையாள திரைப்படம், ’டிரான்ஸ்’. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் அன்வர் ரஷீத் தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப் படம் ‘நிலை மறந்தவன்’என்ற பெயரில் தமிழில் வெளியாகவுள்ளது. தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தமிழில் வெளியிடுகிறது. இந்த திரைப்படம் வரும் ஜூலை 15 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படும் என நிறுவனம் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியான போதே சமூகவலைத்தளங்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. மதத்தின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்தி அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி அவர்கள் உயிருடன் விளையாடுகிறது ஒரு போலி மத கும்பல் என்ற ஒற்றைவரி கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், மதமாற்ற சக்திகளின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியது. கேரளாவில் மக்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தமிழகத்தில் இந்த திரைப்படம் வெளியானால் எங்கே தங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடுமோ என பல மதமற்ற சக்திகள் டிரைய்லர் வெளியீட்டின்போதே கூப்பாடு போட்டன. சில கட்சியினரும் அந்த மதமாற்ற சக்திகளுக்கு துணையாக பேசினர். நிலை மறந்தவன் திரைப்படம் வெளியானால் தியேட்டர் முன்பு தீ குளிப்போம் என பாதிரி ஷாம் யேசுதாஸ் கூறியிருந்தார். இந்நிலையில் முழு திரைப்படமும் வெளியாகும்போது, அது எது போன்ற தாக்கத்தை உருவாக்கும், என்னென்ன விவாதங்களை உண்டாக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே மக்களிடம் அதிகரித்துள்ளது.