தமிழக முதல்வர் ஸ்டாலினின் வீட்டின் முன்பாக மாணவி லாவண்யாவிற்கு நீதிகேட்டு ஏ.பி.வி.பி மாணவர்களும் நிர்வாகிகளும் அறவழியில் போராடினர். இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இரக்கமில்லாமல் அராஜகமன முறையில் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. தமிழக அரசின் இந்த ஜனநாயக அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரத தேசமெங்கும் கடந்த ஏழு நாட்களாக பல்வேறுகட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், மாணவர்களது ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதுகுறித்து ஏ.பி.வி.பி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பேச்சு சுதந்திரத்தை நிலைநாட்டியதற்காக நீதிமன்றத்திற்கு ஏ.பி.வி.பி நன்றி தெரிவித்துக்கொள்கிறது. ஏ.பி.வி.பி தேசிய பொதுச்செயலாளர் நிதி திரிபாதி உள்ளிட்ட 31 பேருக்கு ஜாமீன் வழங்கியதன் மூலம், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் தனிநபரின் உரிமையை நீதித்துறை நிலைநாட்டியுள்ளது. இதற்காக போராடிய பாரதம் முழுவதும் உள்ள ஏ.பி.வி.பி நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.