பாரதம் வரவேற்பு

ஜனவரி 3ல், அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் அணு ஆயுதப் போரையும் அணு ஆயுதப் போட்டியையும் தவிர்ப்பது குறித்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டன. அணுஆயுதப் போரால் வெல்ல முடியாது, அதை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்று உறுதியளித்தன. ஐந்து வல்லரசு நாடுகளின் கூட்டு அறிக்கையை பாரதம் வரவேற்றுள்ளது. ‘ஒரு பொறுப்பான அணு ஆயுத நாடாக, உலகளாவிய அணு ஆயுதக் குறைப்பு, அணு ஆயுதத் தடைக்கு பாரதம் தொடர்ந்து பங்களிக்கும். அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம், அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கோட்பாட்டை பாரதம் பின்பற்றுகிறது. உலகளாவிய, பாரபட்சமற்ற மற்றும் சரிபார்க்கக்கூடிய அணு ஆயுதக் குறைப்பு இலக்கில் பாரதம் உறுதியாக உள்ளது’ என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார்.