தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடந்துகொண்டுள்ளது. தி.மு.கவை சேர்ந்தவர்களே யாராவது தவறு செய்தாலும், ஒரு சின்ன குற்றத்தில் ஈடுபட்டாலும், நிச்சயமாக சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன், அண்ணா மீது ஆணையாக சொல்கிறேன், கலைஞர்மீது ஆணையாகச் சொல்கிறேன், இந்த ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார். அதில் எந்த மாற்றமும் கிடையாது’ என தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
தி.மு.க அரசு பதவியேற்ற இந்த ஏழு மாதங்களில் தி.மு.கவினர், கொலை கொள்ளை, அடிதடி, அடாவடி, கட்டப் பஞ்சாயத்து, ரௌடியிசம், மிரட்டல், வழிப்பறி, பெண்கள் மீதான வன்முறை என நூற்றுக்கணக்கான குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
உதாரணமாக, கொலை வழக்கில் சிக்கிய தி.மு.க சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அலங்காநல்லூரில் தி.மு.க நிகழ்ச்சிக்கு மாணவர்களை சேர், டேபிள், மேஜைகளை துாக்கி வர செய்த எம்.எல்.ஏ வெங்கடேசன், கோட்டப்பாளையத்தில் ஒரு மணி நேரம் தன்னை வரவேற்க பள்ளி மாணவிகள் நிற்கவைத்த அமைச்சர் நேரு, இந்து முன்னணி சென்னை மாவட்டத் தலைவரை மிரட்டிய அமைச்சர் சேகர் பாபு, செருப்பு பிய்ந்து விடும் என ஆட்சியர் முன்னிலையில் அரசு ஊழியர்களை மிரட்டிய தி.மு.க எம்.எல்.ஏ எழிலரசன், நெல்லையில் ஜெயா டிவி நிருபரை மிரட்டிய தி.மு.க மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன், ஏலச்சீட்டு மோசடி, மணல் கடத்தல் புகார்களை பதிவு செய்யக்கூடாது என வேலூர் காவல் சார் ஆய்வாளர் சீனிவாசனுக்கு மிரட்டல் விடுத்த தி.மு.கவினர், தென்காசியில் அ.தி.மு.க பெண் உறுப்பினரின் சேலையை இழுத்த திமுக பிரமுகர்,
மதுரையில் அரசு பேருந்து ஓட்டுனரின் கையை வெட்டிய தி.முக நிர்வாகி, தி.மு.கவில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்த வடிவேலுவை அடித்துக்கொன்ற தி.மு.க ஈஸ்வரமூர்த்தி, கொரோனா பொதுமுடக்கத்தின்போது காவலர்களை மிரட்டிய பல தி.மு.க நிர்வாகிகள், பெண் காவலரை மிரட்டிய பொங்கலூர் தி.மு.க ஒன்றிய செயலாளர் ரவி, தாம்பரத்தில் சூப் கடையை அடித்து உடைத்த தி.மு.க ரௌடிகள், திருச்சி செங்கல்சோலை ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமாரை கொன்ற மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவர் விக்னேஸ்வரன் கூட்டாளிகள், பேரங்கியூரில் நிலத்தை அபகரித்த தி.மு.க ஒன்றிய செயலாளரின் கார் ஓட்டுனர்,
வாழப்பாடியில் கூடுதல் பொங்கல் தொகுப்பு வழங்க ரேஷன் கடை ஊழியர்களை மிரட்டிய உடன் பிறப்புகள், புதுகரடிநாயக்கனூர் ரேஷன் கடையில் மக்களை மிரட்டிய திமுக தோழர், அம்மா உணவக பெயர் பலகையை அடித்து உடைத்தவர்கள், அண்ணா நகர் சந்திப்பில் ஒருகோடியை வழிப்பறி செய்ய முயன்ற தி.மு.க தொண்டர், சேலம் தாதகாப்பட்டியில் தி.மு.க கொடி கம்பம் சாய்ந்து மாணவிக்கு ஏற்பட்ட காயம்,… என நீள்கிறது பட்டியல்.
இவர்கள் மீது இதுவரை ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைகள் என்ன? அவர்களை கட்சியில் இருந்து நீக்கினாரா, பதவியை பறித்தாரா, கடுமையான நடவடிக்கை எடுக்க ஆணையிட்டாரா? பட்டியலிடுவாரா ஸ்டாலின்?