இந்து முன்னணி தீர்மானம்

இந்து முன்னணி செயற்குழுவில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், சக வீரர்கள் மற்றும் காலமான பல்வேறு முக்கியஸ்தர்களுக்கு இந்துமுன்னணி மாநில செயற்குழுவில் மௌன அஞ்சலியும் இரங்கலும் செலுத்தப்பட்டது. பிறகு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், கொரோனா தடுப்பூசியை உரிய நேரத்தில் அனைவருக்கும் இலவசமாக வழங்கிய மத்திய அரசுக்கும், தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுத்த மாநில அரசுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தி.மு.கவின் 200 நாட்கள் ஆட்சியில் 130 கோயில்கள் இடிக்கப்பட்டதற்கும் பாரம்பரியமிக்க சித்திரை புத்தாண்டை மாற்றி, தை 1ம் தேதியை புத்தாண்டு தினமாக அறிவிக்க முயல்வதற்கும் தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி கோயில்களின் முன்பாக உள்ள நாத்திகவாதிகளின் சிலைகளை அகற்றவேண்டும், தமிழகத்தில் ஹிந்துக்களை மதம் மாற்றும் நோக்கில் சட்டவிரோத சர்ச்சுகளும் மசூதிகளும் புற்றீசல் போல முளைக்கின்றன. அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழகத்தில் தி.மு.க அரசு பொறுப்பேற்றவுடன் கிறிஸ்தவர்களின் மோசடி மதமாற்ற பிரச்சாரம் அதிகரித்துள்ளது. மோசடி மதமாற்ற பிரச்சாரத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.