ஹரியானா, உத்தரகண்ட், உத்தரபிரதேசம் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகமாக உள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயச் செலவுகள் அதிகமாக உள்ளபோதும் குறைந்தபட்ச ஆதரவு விலை குறைவாகவே கொடுக்கப்படுகிறது. விவசாயிகளின் ஒவ்வொரு பயிரின் விலையும், வளர்ப்புக்கான உள்ளீட்டு செலவும் ஆண்டுக்காண்டு அதிகரிக்கிறது. ஆனால் பஞ்சாப் அரசு, அதன் மாநிலத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலையினை 2017ம் ஆண்டு முதல் உயர்த்தவில்லை’ என தெரிவித்துள்ளார். சித்துவின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கும் அம்மாநிலத் தலைவர் சித்துவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வரும் சூழலில் தற்போது அவர் பா.ஜ.கவை புகழ்ந்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.