பிரதமருக்கு கோரிக்கை

பேட்ரியாட்டிக் பீப்பிள் ஓரியண்ட் சைன்ஸ் அன்ட் டெக்னாலஜி குரூப் (பி.பி.எஸ்.டி) என்ற அமைப்பு, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘உலகமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பாரதத்தில், ஆயுர்வேதம், சித்தா, யுனானி போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகள், தொற்று தடுப்பில் முக்கிய பங்காற்றியுள்ளன. தமிழகம் உட்பட தேசம் முழுதும், பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறையில் அரசு தனியார் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். இதில் நோயாளிகள் அனைவரும் முறைந்த காலத்தில் குணமடைந்துள்ளனர். எந்த நோயாளியும் தீவிர சிகிச்சை நிலைக்கு செல்லவில்லை. எனவே, நோயை தடுக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இந்த பாரம்பரிய மருத்துவ முறைகளை இலவசமாக அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பொது மருத்துவமனைகளிலும், ஆரோக்கிய சேவை மையங்களிலும் இதனை அமல்படுத்த வேண்டும். இதன் மூலம், பாரம்பரிய மருத்துத்தின் செயல்திறனை உலகத்திற்கு கொண்டு செல்ல முடியும்’ என்று கூறப்பட்டுள்ளது.