கொரோனா மரணங்களை மறைக்க வேண்டாம் என பிரதமர் கோரியுள்ள நிலையில், ‘கடந்த 24 நாட்களில் தில்லி அரசாங்கத்தால் 4,500 கொரோனா தொடர்பான மரணங்களை கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு மறைத்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியகியுள்ளன. ஏப்ரல் 18 முதல் மே 11 வரை இறுதி சடங்கு மற்றும் அரசாங்க இறப்பு எண்ணிக்கை புள்ளிவிவரங்களை ஒப்பிடுகையில் 4,783 இறப்புகளின் ஒட்டுமொத்த வேறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.அன்றாட புள்ளிவிவரங்களில் இந்த மாறுபாடு தினமும் அதிகபட்சமாக 336 ஆகவும், குறைந்தபட்சமாக சில நாட்களில் 32 ஆகவும் இருந்துள்ளது’ என தி ஹிந்து நாளிதழின் பிரத்யேக அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.’தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அரசாங்கம் இறப்பு புள்ளிவிவரங்களை மறைத்து வருகிறது. தகனங்களுக்கான விறகுகளை வாங்குவதற்கான எங்கள் கோரிக்கையைகூட அவர்கள் புறக்கணிக்கின்றனர். குடிமக்களை சிரமத்திற்கு ஆளாக்குகின்றனர்’ என பா.ஜ.கவை சேர்ந்த வடக்கு எம்.சி.டி மேயர் ஜெய் பிரகாஷ் குற்றம் சாட்டிசாட்டியுள்ளார். இந்த ஏற்றத்தாழ்வுக்கு தொழில்நுட்ப சிக்கல்தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசு கூறிவருகிறது. முன்னதாக, ஆக்ஸிஜன் விஷயத்திலும் இவர்கள் அரசியல் செய்து பல உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்தது நீதிமன்ற ஆக்ஸிஜன் தணிக்கை உத்தரவால் வெளிவந்துள்ளதும் இவர்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர், ஆக்ஸிஜனை திருடி பதுக்கியதும் அவற்றை கள்ள சந்தையில் விற்று பிடிபட்டதும் குறிப்பிடத்தக்கது.