மருத்துவ ஆக்ஸிஜன் தயாரிப்பு ஆலைகளை நிறுவபி.எம்-கேர்ஸ் நாடு முழுவதும் 500 மருத்துவ அக்ஸிஜன் தயாரிப்பு ஆலைகளுக்கு நிதி ஒதுக்கியுள்ளது. இந்த ஆலைகள் மூன்று மாதங்களுக்குள் அமைக்கப்பட உள்ளன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ), டெல்லி, ஹரியானா மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ், டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, சப்தர்ஜங் மருத்துவமனை, லேடி ஹார்டிங்கே மருத்துவக் கல்லூரி மற்றும் ஹரியானாவின் ஜஜ்ஜார் மருத்துவமனைகளில் முதற்கட்டமாக இவை நிறுவப்பட்டுள்ளன. டி.ஆர்.டி.ஓவுடன் இணைந்து செயல்படும் கோவையை சேர்ந்த டிரைடென்ட் நியூமேடிக்ஸ் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. மேலும் 48 ஆக்ஸிஜன் ஆலைகளை இந்நிறுவனம் தயாரிக்கிறது. 332 ஆக்ஸிஜன் ஆலைகளை டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் தயாரித்து வருகிறது. இவை, நிமிடத்திற்கு 1,000 லிட்டர் ஆக்ஸிஜன் தயாரிக்கும் திறன் பெற்றவை. நமது தேஜாஸ் போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் ஆன்போர்டு ஆக்ஸிஜன் தயாரிப்பு தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு இவைகளை டி.ஆர்.டி.ஓ உருவாக்கியுள்ளது. சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனமும் 120 அக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவ முயற்சிகளை எடுத்து வருகிறது.