நாட்டில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வெவ்வேறு துறைகளுக்கு, வெவ்வேறு வேலை நேரம் என்ற திட்டத்தை அறிவிக்கலாம் என்று, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான, ‘சி.ஏ.ஐ.டி.,’ பிரதமருக்கு யோசனை தெரிவித்துள்ளது. இது குறித்து, இவ்வமைப்பு தெரிவித்து உள்ளதாவது: அதாவது, கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி, இரவு நேர முழு ஊரடங்கு என்று தடை விதிப்பதற்கு பதிலாக, அரசு, தனியார் துறை அலுவலகங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை என்றும், கடைகள், சந்தைகள் போன்றவை காலை 11 மணி முதல் மாலை, 5 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கலாம். இதை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ப, வேலை நேரத்தை மாற்றி அறிவிக்கலாம். இப்படி செய்தால் பொருளாதார மீட்சி பாதிக்கப்படாது என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.