ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முதல் பாரத பெண் பிரதிநிதியாக ரஷ்மி சமந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஒரு ஹிந்துவாக இருந்ததால் அங்குள்ள இடதுசாரி மற்றும் ஹிந்து எதிர்பாளர்களால் இழிவுபடுத்தப்பட்டுள்ளார். இதனால் ரஷ்மி தன் பதவியை ரஜினாமா செய்துள்ளார். ஆக்ஸ்போர்ட் இடதுசாரி ஆசிரியரான டாக்டர் அபிஜித் சர்க்கார், ரஷ்மியின் பெற்றோரை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதுடன், ‘ரஷ்மியின் தேர்தலுக்கு பிரதமர் மோடி நிதியுதவி வழங்கினார், ரஷ்மி இஸ்லாமிய எதிர்ப்புவாதியாக இருப்பார்’ என்பது போன்ற பொய் குற்றச்சாட்டினையும் முன்வைத்துள்ளார்.
இது குறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ‘மகாத்மா காந்தியின் நிலத்தில் பிறந்த நாங்கள் ஒருபோதும் இனவெறியை அங்கீகரிக்க மாட்டோம், நாங்கள் இங்கிலாந்துடன் வலுவான உறவைக் கொண்டுள்ளோம். இதுபோன்ற விஷயங்களை நாங்கள் அவர்களிடம் எடுத்துச்செல்வோம். இனவெறி மற்றும் பிற சகிப்பின்மைக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் எப்போதும் வெற்றி பெறுவோம்’ என தெரிவித்தார்.