மூக்குடைப்பட்ட வி-டெம்

சுவீடனை சேர்ந்த ‘வி-டெம்’ மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ‘பிரீடம் ஹௌஸ்’ ஆகிய அமைப்புகள் பாரதத்தை வேண்டுமென்றே இழிவுபடுத்தும் விதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டன. பிரீடம் ஹவுஸின் அறிக்கையில், பாரதத்தை ‘சுதந்திரம்’ என்பதிலிருந்து ‘ஓரளவு சுதந்திரம்’ என தரமிறக்கியது. வி-டெம், பாரதத்தை ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு’ என்பதிலிருந்து ‘தேர்தல் எதேச்சதிகாரம்’ என தரமிறக்கியது.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், , ‘நாங்கள் தேசியவாதிகள். உலகின் 70 நாடுகளுக்கு நாங்கள் கொரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம். ஆனால், மற்ற சர்வதேச நாடுகள் உலகிற்கு இதுவரை எத்தனை தடுப்பூசிகளைக் கொடுத்தன? அவர், பாரதத்தில், தனது நம்பிக்கைகளை கடைப்பிடிக்க ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உள்ளது.  நான் சத்தியப் பிரமாணம் செய்யும்போது மத புத்தகத்தில் கை வைத்து உறுதி கூறமாட்டேன். ஆனால் உங்கள் நாடுகள் என்ன செய்கின்றன? பாரதத்தில் நடைபெறும் தேர்தல்களை யாரும் கேள்வி கேட்கவில்லை, ஆனால் உங்கள் நாடுகளைப் பற்றி அதுபோல உங்களால் கூறமுடியுமா? ;என கேள்வி எழுப்பினார்.

மேலும், உலகில் சுயமாக நியமிக்கப்பட்ட பாதுகாவலர்களாக உங்களை கருதுகிறீர்கள். உங்கள் ஒப்புதலை யாரும் பாரதத்தில் எதிர்பார்க்கவில்லை.  நீங்கள் விளையாட விளையாட விரும்பும் விளையாட்டை விளையாட நாங்கள் தயாராக இல்லை’ என தெரிவித்தார்.