தேர்வு குறித்த மன அழுத்தத்தையும் பயத்தையும் மாணவ மாணவிகளுக்கு போக்கும் வகையில், பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில், ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ நடத்தும் ‘பரிக்ஷா பே சர்ச்சா’ எனப்படும் ‘தேர்வு குறித்த விவாதம்’ வெற்றிகரமாக நான்காவது ஆண்டாக இம்மாதம் இறுதியில் நடைபெறும். இதில் பிரதமர் மோடியுடன் பேச நாடு முழுவதிலும் இருந்து, 10 லட்சத்து 32 ஆயிரம் மாணவர்கள், 2 லட்சத்து 60 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்களும் இந்த திட்டத்திற்கு பதிவு செய்துள்ளனர். இதில் தேர்ந்தெடுக்கப்படும் சுமார் இரண்டாயிரம் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் மாநிலம், யூனியன் பிரதேச தலைமையகத்திலிருந்து ஆன்லைனில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். சிறப்பு ‘பரிக்ஷா பே சர்ச்சா’ கிட், பாராட்டு சான்றிதழ், மாணவர்கள் பிரதமருடன் நேரடியாக கேள்விகள் கேட்க வாய்ப்பு, பிரதமருடன் அவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம், பிரதமரின் கையெழுத்துடன் டிஜிட்டல் நினைவு பரிசாகக் கிடைக்கும்.