பாரதம் ஹிந்து நாடுதான், சொன்னது முஸ்லிம் பேராசிரியர்

பாரதம் ஹிந்து தேசமானால், இடதுகளுக்கும் தாராளவாதிகள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர்களுக்கும் அப்படி  என்ன தான் பிரச்சினை? அவர்களுடைய அரதப் பழசான வாதம்: ஹிந்து தேசம் என்று அறிவிக்கப் பட்டால் மதச் சார்பின்மை கெட்டு விடுமாம். இது எப்படி சொத்தையான வாதம் என்று பார்ப்போம்.

ஆதாரமில்லையென்றால் குதர்க்கம் தானே?

இந்தியாவில் காலம் காலமாக,  பௌத்தர்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள்,சமணர்கள், ஜொராஸ்டரியர்கள் (பார்சிக்கள்), கிறித்துவர்கள் என்று பல மதத்தினரும்  வாழ்ந்து வருகின்றனர். அனைத்து மதத்தினவருக்கும் வழிபாட்டு தலங்கள் உள்ளன. ஒருவர் தம் மதத் தலத்திற்கும் மற்றவர் வழிபட்டுத் தலங்களுக்கும்  சென்று வரவும் முடியும். ஹிந்து ராஷ்டிரமாக அறிவிக்கப் படுவதால் மதச் சார்பின்மைக்கு எந்த வித ஆபத்தும் வந்து விடப் போவதில்லை. ஏனென்றால், மதம் மாற்றும் எண்ணமே ஹிந்துக்களிடம் இருந்ததில்லை. ஹிந்துக்கள் எந்த காலத்திலும் பிற மதத்தினர் மீது காழ்ப்புணர்ச்சியைக் காட்டியதே இல்லை. மாறாக, மாற்று மதத்தினரை உரிய கௌவரத்துடன் அரவணைத்துச் சென்றுள்ளனர். அதனால் தான், எல்லா மதத்தினரும் இந்த மண்ணில் செழித்து வளர்ந்துள்ளனர்.

அசலும் போலியும்

மதச் சார்பற்ற நாடுகள், இடதுகள், தாராளவாதிகள், மனித உரிமைக்கு குரல் கொடுப்பவர்கள் எல்லாம் முஸ்லீம்களுக்கோ கிறித்துவர்களுக்கோ ஏதாவது பிரச்சினை என்றால் கூரை மீது  நின்று கொண்டு தொண்டை கிழிய ஓலமிடுவார்கள். அவர்களுக்கு மனித உரிமை மீறல்- மத ரீதியான தாக்குதல் என்றால் மியான்மர், பாலஸ்தீனம், ஏமன் போன்ற நாடுகளில் நிகழ்ந்தவை தான் நினைவுக்கு வருகின்றன.

ஆனால், இந்த நாடுகளுக்கும், குழுக்களுக்கும் ஹிந்துக்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இன்னும் பல முஸ்லீம் நாடுகளில் ஹிந்துக்கள் மீதும்  சீக்கியர்கள் மீதும் நிகழ்த்தப்படும் கொடுமைகள் ஒரு பொருட்டே இல்லை. காஷ்மீரில் ஹிந்து பண்டிட்களுக்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக நேரிட்ட இன்னல்களிலிருந்து அவர்கள் மீள்வதற்கு மதச் சார்பற்றவர்கள்  என்று மார்தட்டிக் கொள்ளும் எந்த நாடாவது ஆதரவுக் கரம் நீட்டியதுண்டா?

ஓரவஞ்சனையில்லாமல் வேறு என்ன?

மதச் சார்பற்ற நாடு என்று ஒரு புறம் அரசியலமைப்பு சட்டம் சொல்லும் அதே வேளையில், இந்தியாவில் தான் மதத்திற்கு ஒரு சட்டம். பாருங்களேன்,  ஹிந்துக்களின்  அமர்நாத் யாத்திரைக்கோ கும்ப மேளாவிற்கோ, சலுகை ஏதும் கிடையாது.

இங்கே தான் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள முஸ்லீம்களுக்கு பயணச்செலவு மானியமாக தலா ஆயிரம் அமெரிக்கா டாலர் அளிக்கப்பட்டு வந்தது. (உச்ச நீதிமன்றம் தலையிடவில்லையென்றால் மேலும் தொடர்ந்திருக்கும்). இந்த தொகை, வஹாபி முஸ்லீம் வழியைப் பின்பற்றும் சவூதி அரேபியா தனது பொருளாதார வளத்தைப் பெருக்கிக் கொள்ளத்தான் பயன்பட்டது. வஹாபிகள் யார்? விக்கிரக வழிபாட்டையுடைய ஹிந்துக்களை இயன்ற வழிகளில்லாம் இன்னலுக்குள்ளாக்குபவர்கள். வஹாபிக்கள் தான் உலகெங்கும் தீவிரவாதத்தைக் கொண்டு செல்பவர்கள்.

பெரும்பான்மை மதத்திற்கு எதிரான இப்படிப்பட்ட  ஒரு ஓரவஞ்சனை  எந்த வளர்ந்த மேலை நாடுகளிலாவது உண்டா?

இப்பொழுது புரிகிறதா மேலை நாடுகளின் போலி மதச் சார்பின்மை?

மதச் சார்பின்மை என்பதெல்லாம், 1976ல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டதினால் விளைந்தது என்று எண்ண வேண்டாம், இங்கே பல ஆயிரம் ஆண்டுகளாக கடைபிடிக்கப் பட்டு வரும் ஹிந்து வாழ்வியலின் கொடை தான் எல்லா மதத்தினரையும் மதிக்கும் மாண்பு. எப்படி என்று நாளை மேலும் நிறைவுப் பாகத்தில் பார்ப்போம்.

One thought on “பாரதம் ஹிந்து நாடுதான், சொன்னது முஸ்லிம் பேராசிரியர்

  1. சமுக நீதி என்ற பெயரில் இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களுக்கு இந்திய நாடு போதுமான அளவு சலுகைகள் கொடுத்து விட்டது. இப்போதுஅவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள்.

    இனி அனைத்தையும் தாமதிக்காமல் சரி செய்ய வேண்டும்.

Comments are closed.