பாரதம் ஹிந்து நாடுதான்; சொன்னது முஸ்லிம் பேராசிரியர்

பாகம் -3

கடந்த இரண்டு நாட்களில், இடதுசாரி- மதச் சார்பின்மை- தாராளவாதிகள் – மனித உரிமை பற்றி எல்லாம் பேசும் போலிகளின் இரட்டை முகத்தைப் பார்த்து வருகிறோம். உண்மையில், மதச்சார்பின்மை என்றால் என்பதனை இன்று நிறைவுப் பகுதியில் காணலாம்.

ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

உண்மையிலேயே  மதச் சார்பினமை நடைமுறைப் படுத்தப்பட்டால்,  அனைத்து குடிமக்களுக்கும் சட்டங்கள் பொதுவாகத்தானே இருக்கும். இப்பொழுது, இந்தியாவில் நடப்பது ? ஹிந்து கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் ; ஆனால், மசூதிகளுக்கும் கிறித்தவ தேவாலயங்களுக்கும் தன்னாட்சி!

இந்திய மக்கள்  என்றுமே உலகெங்கிலுமிருந்து மத ரீதியான கொடுமைகளுக்கு உட்படுத்தப் பட்டு, விரட்டப்பட்ட சிறுபான்மையினர்களுக்கு  அடைக்கலம் அளித்து பாதுகாத்து வந்துள்ளனர். வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள்:  2000 ஆண்டுகளுக்கு முன் வந்த யூதர்கள், 1800 ஆண்டுகளுக்கு முன் வந்த சிரியன் கிருத்தவர்கள், 1300-1100 ஆண்டுகளுக்கு முன் வந்த பார்சிக்கள் என்ற எல்லோருமே இதற்கு சாட்சிகள்.  அவ்வளவு ஏன் ,  பொது ஆண்டு 1000 தொடங்கி  1739 வரை  முஸ்லீம் படையெடுப்பு- முகலாய ஆட்சிகளில் கொடுமைகளுக்கு உள்ளான (கிட்டத் தட்ட 10 கோடி ஹிந்துக்கள் உயிரிழந்தனர் என்று கணக்கிடப்படுகிறது) மக்கள் அதற்கு பழிக்குப் பழி என்று புறப்பட்டு விடவில்லையே?

அதைத்தான் நான் சொல்கிறேன்,  அரசியல் சட்டம் சொல்லிக் கொடுத்து வந்ததில்லை, மதச் சார்பின்மை என்பது. இந்த மண்ணில் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் ஹிந்துக்களின் இரத்தத்தில் ஊறிய உயரிய மரபிது. ஹிந்து வாழ்வு முறையும் மதச் சார்பின்மையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களை போன்றதே.

சிக்கலின் மூலகாரணம்

ஹிந்துக்களிடையே ஒரு சில கொள்கை வேறுபாடுகளினால் பிரிந்து போன சமணர்கள் – பௌத்தர்கள் – சீக்கியர்கள் எல்லாம் பெரும்பாலும் ஒருமித்துத் தானே வாழ்கிறார்கள். காலம் காலமாக வேற்றுமையை – பகைமையை வளர்த்தும் முட்டிக் கொண்டுமா வாழ்கிறார்கள்? அப்படி இல்லாததற்கு பெரும் காரணம் ஹிந்துத்துவமே! வழிபடும் தெய்வம் வேறானால் என்ன? ஹிந்து மதத்தில் தான் கடவுளை ஏற்றுக் கொள்ளாத நிரீச்சுவரவாதிகளுக்கும்  (கடவுள் மறுப்பாளர்கள்) இடம் உண்டு. இப்படி ஒரு விசால மனப்பான்மையை உலகில் வேறு எங்கு உங்களால் காட்ட முடியும்?

அதனால் தான் என் கருத்து, இந்திய நாட்டில் மத உராய்வுகளின் – சிக்கல்களின் அடிப்படைக்கு காரணம் ஹிந்துத்துவம் அல்ல; போலி மதச் சார்பின்மை தான். உதட்டளவில், மதச் சார்பின்மையைப் பேசிக்கொண்டு மனங்களுக்கு இடையே வேற்றுமையை வளர்க்கும் போலிகளின் பிடியிலிருந்து இந்தியர்கள் மீள, மாற்று காண வேண்டிய தருணம் இது.

சரியான மாற்று

ஹிந்துக்கள் வரலாற்றில் பாடங்களைக் கற்றுக் கொண்டு லிருந்து உலகிற்க்கு வழிகாட்ட, நாட்டிற்கு வலிமையும் வளமும் கூட்ட, மத மாச்சரியங்கள் மறைய ஒற்றுமை ஒங்க, இந்தியா ஹிந்து ராஷ்டிரமாக அறிவிக்கப் பட வேண்டும்.

அப்பொழுது தான், பொது சிவில் சட்டம் வரும். மத மாற்றம் தடுக்கப் படும். தப்லிக் ஜமாத் போன்றவர்களின் ஆட்டம் ஒடுங்கும். ஒரு கண்ணில் வெண்ணை, இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற வஞ்சகங்கள் விலகும்.

இந்தியா, சின்ன சின்ன முஸ்லீம் நாடுகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பணிந்து போன காலங்கள் மறைந்து, தன் வலிமையையும் மதிப்பையும் உணர்ந்து நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம் இது.