பாரதம் ஹிந்து நாடுதான் – சொன்னது முஸ்லிம் பேராசிரியர்

காலித் உமர் – தாரிக் பாதேஹ் என்ற பாகிஸ்தானில் பிறந்து மேலை நாடுகளில் வாழும் இரண்டு பேராசிரியர்களின் முக நூல் பதிவிலிருந்து, தமிழில் மொழியாக்கம் செய்துள்ளவர்: வேம்படியான்  கட்டுரை மூன்று பாகமாக இன்று தொடங்கி , அடுத்த இரண்டு நாட்களில் வெளி வந்து நிறைவுறும்.

நரேந்திர மோடியும் அவருடைய கட்சியினரும் இந்தியாவை ஹிந்து ராஷ்டிரமாக அறிவிக்க    விரும்புகின்றனர் என்று கூறப்படுகிறது. அது உண்மையானால், அதில் என்ன தவறு? இந்தியா ஏன் ஹிந்து ராஷ்டிரமாக  அறிவிக்கப்பட வேண்டும் என்ற என் கருத்துக்கு சில நியாயங்களை உங்கள் முன் வைக்கிறேன் ,

இந்திய நாகரிகத்தின் தொன்மையையும் சிறப்பையும் தனியாக நான் அறிமுகப்படுத்திதான் நீங்கள் அறிய வேணடுமா என்ன? குறைந்தது 5000ம் ஆண்டு பழமையான வரலாற்றைக் கொண்ட பாரத தேசம் (பாரத வர்ஷ்), உலகில் உள்ள ஹிந்துக்களின் 95 விழுக்காட்டினர் வசிக்கும் நாடு. கிருத்துவத்திற்கும் இஸ்லாத்திற்கும் அடுத்த உலகத்தவரால் பின்பற்றப் படும் 3வது பெரிய   மதம். மற்ற இரண்டு மதங்களை போலில்லாமல், உலகின் 97 சத வீத மக்கள், இந்தியா, நேபாள், மொரீஷியஸ் என்ற 3 நாடுகளில் தான் வசிக்கிறார்கள். பிரகடனப் படுத்திக்கொள்ள தயங்கக் கூடாது.

இடதுகளின் கணக்கே தனி !

இஸ்லாமின் பிறப்பிடமான சவுதி அரேபியாவில் இன்று உலகின் முஸ்லீம் ஜனத் தொகையில் 1.6% முஸ்லிம்கள் மட்டுமே  வாழ்கின்றனர் என்ற நிலையிலும்  அந்த நாடு இஸ்லாமிய நாடு என்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் போது , உலகின் 95% ஹிந்துக்கள் வாழும் இந்தியா ஹிந்து ராஷ்டிரமாக ஏன் அழைக்கப் படலாகாது?

உலகில் 53 நாடுகள் தங்களை இஸ்லாமிய நாடுகளாகவும், 100க்கு மேற்பட்டவை கிருத்துவ நாடுகளாகவும், 6 பௌத்த நாடுகளாகவும், இஸ்ரேல் யூத நாடாகவும் அறியப்படுகின்றன. கிருத்துவ நாடுகள் என்ற பட்டியலில் உள்ள 15 நாடுகளில், கிறிஸ்தவம்தான் அரசின் அறிவிக்கப்பட்ட \ அங்கீகரிக்கப் பட்ட  மதம்.  இந்த கிறிஸ்தவ நாடுகளில் இங்கிலாந்து, கிரீஸ் மற்றும் ஐஸ்லாந்து, நார்வே, ஹங்கேரி, டென்மார்க் ஆகியவை அடங்கும்.

தங்களைத் தாங்களே இடதுசாரி  – தாராளவாதிகளாக சொல்லிக் கொள்பவர்கள் இவற்றை எல்லாம் கண்டும் காணாமலும் இருப்பார்கள். அதே நேரம் இந்தியாவை ஹிந்து ராஷ்டிரம் என்று சொன்னால் உடனே கண் எரிச்சல் வந்து விடும்! ஆகாயத்திற்கும் மண்ணுக்குமாக குதிப்பார்கள் !