800 படம்; வெளிச்சத்துக்கு வந்த கோர முகம்

இலங்கை மலையக தமிழர், ஏழை தோட்ட தொழிலாளி குடும்பத்தில் இருந்து உருவான இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படம் ‘800’. இதில் நடிக்க ஒப்பந்தமானவர் விஜய் சேதுபதி.

பலத்த எதிர்ப்பால் இந்த படத்தில் நடிப்பதை விட்டு வெளியேறினார் விஜய் சேதுபதி. முத்தையா முரளிதரன் ஒரு கிரிக்கெட் வீரர், அரசியல்வாதி அல்ல. அவர் தமிழகத்து மருமகனும் கூட. அப்படியிருந்தும் இந்த சர்ச்சையை கிளப்பினர் தமிழ் பிரிவினைவாதிகள்.

இதன் பின்னணியில் திராவிட, கிருஸ்தவ அமைப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. இதே பிரிவினைவாதிகளின் கருத்துகளை தன் படங்களிலும், மேடை பேச்சுகளிலும் வெளிப்படுத்தியவர் விஜய் சேதுபதி.

ஆனால் அவருக்கே தங்களின் கோர முகத்தை காட்டிவிட்டனர் இவர்கள். இந்த நிகழ்வு, தமிழ் திரைப்படத்துறையில் உள்ள பிரிவினைவாதிகள், கம்யூனிச சித்தாந்திகள், திராவிட அரசியல்வாதிகள், கிருஸ்தவ, ஜிஹாதி அமைப்புகளின் தலையீட்டை வெளிச்சம் போட்டு கட்டியுள்ளது.

கலைக்கு மொழி, ஜாதி பேதமில்லை என பேசும் வீரமணி, வைகோ, பாரதிராஜா, திருமாவளவன் உள்ளிட்டோர் தான் தற்போது இதை எதிர்க்கின்றனர்.

ராஜபக்ஷேவின் முதலீடு உள்ளது என கூறி முதலில் லைக்காவை எதிர்த்தவர்கள் பின்னர் என்ன உடன்பாடு ஏற்பட்டதோ தற்போது அதை எதிர்ப்பதில்லை! இதே முரளிதரன் கலாநிதி மாறனின் ‘சன் ரைஸர்ஸ்’ அணிக்கு பயிற்சியாளரான போதும் அதை எதிர்க்கவில்லை.

இவற்றை பார்க்கும் போது தமிழ் உணர்வு, இலங்கை விவகாரம் உள்ளிட்ட இவர்கள் கையில் எடுக்கும் எந்த பிரச்சனையும் இவர்களது உண்மை உணர்வல்ல, அனைத்தும் இவர்களின் அரசியல் வியாபாரமே என்பது தெளிவாகிறது.