காவல்துறையில் 3ம் பாலினத்தவர்

கர்நாடக காவல் துறையில் 3ம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீட்டை வழங்கி அம்மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்துபேசியன் அவர், “கர்நாடக ஆயுதப்படை காவல் பிரிவில் காலியாக உள்ள 3,484 பணி இடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் சேர விரும்புபவர்கள் அக்டோபர் 31க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாநிலத்தில் முதல் முறையாக காவல்துறையில் 3ம் பாலினத்தவர் என்று அழைக்கப்படும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 3,484 பணி இடங்களுக்கு நடைபெறும் இந்த தேர்வில், 79 இடங்கள் 3ம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு செய்யப்படும். இது 3ம் பாலினத்தவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது” என தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் சமூகத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.