28,000 ஏக்கர் கோயில் நிலங்கள்

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள அருள்மிகு வேதபுரீசுவரர் கோயிலுக்குச் சொந்தமாக 28,609.06 ஏக்கர் நிலம் இருப்பதாக அரசின் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. அவற்றில் பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு அவற்றை முறையாக பாராமரித்து பாதுகாக்க கோரி கடந்த ஆண்டு மனு செய்யப்பட்டுள்ளது. மனுக்களை முறையாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க மூன்று வாரங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.