16/08/2020 இன்றைய விஜயபாரதம் மின்னிதழ்

கலவரத்திற்கு காரணம் தேடுகிறார்கள் 

ஹிந்து தெய்வத்தை இழிவு படுத்தி ஒருவன் முகநூலில் கார்ட்டூன் வெளியிட்டான். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நபிநாயகம், ஆயிஷா பற்றிய ஒரு கார்ட்டூனை ‘நலீன்’ என்பவர் முகநூலில் பதிவு செய்தார். அவர் பெங்களூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ அகண்ட ஸ்ரீனிவாச மூர்த்தியின் அக்கா மகன். செய்தி வெளியான அன்று இரவே முஸ்லிம்கள் சுமார் 1000 பேர் திரண்டு எம்.எல்.ஏ. வீட்டைத் தாக்கினார்கள். அவரது வாகனங்களைக் கொளுத்தி னார்கள். இரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தாக்கினார்கள். 60 போலீசார் காயமுற்றனர். போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இவ்வளவுக்கும் எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்டார். நவீன் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். இது பெங்களூர். சமீபத்தில் தமிழகத்தில் முருகப் பெருமானின் துதியான கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி கருப்பர் கூட்டம் வீடியோ வெளியிட்டார்கள். இதை எதிர்த்து ஹிந்துக்கள் கலவரத்தில் ஈடுபட வில்லை. காவல்நிலையத்தை முற்றுகையிடவில்லை. பொதுச் சொத்துக்களை நாசம் செய்யவில்லை. அரசும் ஆடி அசைந்து பல நாட்கள் கழித்து குற்றவாளிகளைக் கைது செய்தது. ஹிந்துக்கள் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தார்கள். ஹிந்துக்களின் பொறுமையை கோழைத்தனம் என்று அரசு எடுத்துக்கொள்ளக்கூடாது. முஸ்லிம்களின் மனப்பான்மையும் – ஹிந்துக்களின் மனப்பான்மையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகள் கலவரம் செய்ய ஏதாவது காரணம் கிடைக்காதா என்று காத்திருக்கிறது.

மத்திய, மாநில அரசுகளே உஷார்!

சதுர்த்தியை விட சாராய கடையா?

கொரோனாவை காரணம் காட்டி நடப்பாண்டில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. அரசு அனுமதி வழங்கா விட்டாலும் தடையை மீறி ஏற்பாடு செய்தபடி விநாயகர் சதுர்த்தி விழா ஒன்றரை லட்சம் இடங்களில் திட்டமிட்டபடி நடக்கும் என்று ஹிந்து முன்னணி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பாஜகவின் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு ஆங்காங்கே விநாயகர் சிலைகளை வைத்து குறைந்த நபர்கள் ஊர்வலம் இல்லாமல் விசர்ஜனம் செய்வதாக கூறி உள்ளனர். இருந்தும் விநாயகர் சதுர்த்திக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது ஏற்புடையதல்ல. 5198 சாராயக் கடைகள் செயல்படும் ஆனால் சதுர்த்திக்கு தடையா” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அளவுக்கு மிஞ்சும் அதிகாரம் 

பெங்களூர் சாம்ராஜ் நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். பூஜை முடிந்து அனைவரும் சென்ற பிறகு அங்கு வந்த காவல்துறை எஸ்.பி திவ்யா சாரா தாமஸ் கோயிலின் பூஜாரியை மிரட்டி இயேசுவின் புகைப்படத்தை கோயிலின் கருவறையில் வைக்க சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். ஹிந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் இந்த செயலின் புகைப்படம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று 74 வது சுதந்திர தினம் நாடுமுழுக்க கொண்டாடப் பட்டது. அதனையொட்டி ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலக மான நாக்பூரில் அகில பாரத தலைவர் மோகன்பாகவத் தேசியக் கொடியேற்றினார்.
எங்கெங்கும் ஆர்.எஸ்.எஸ்
மூணாறு உள்பட கேரள த்தில் பல பகுதிகளிலும் நிலச் சரிவு, பெரும் ஆள் சேதம், வீடிழப்பு, துயரங்கள். ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் தேவை அறிந்து விரைந்து மக்களுக்கு நிவாரணம் அளிப்பதில் ஈடுபட்டார்கள். அதேபோல வட பிஹாரிலும் ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் வெள்ள நிவாரணப் பணியில் கைகொடுத்த செய்தி வந்துள்ளது.
பணமும் மண்ணும் ஒன்றுதான் 
ஒருநாள் ஸ்ரீராமகிருஷ்ணர் கங்கை நதிக் கரையோரம் நின்று கொண்டிருந்தார். கங்கை நதியையும், அதன் பிரவாக ஓட்டத்தையும் கண்டு மனதில் ரசித்துக் கொண்டிருந்தார். ஒரு கையில் சிறிது பணமும், மற்றொரு கையில் கொஞ்சம் மண்ணும் வைத்திருந்தார். முதலில் கையிலிருந்த மண்ணை கங்கையில் வீசினார். பிறகு கையில் இருந்த பணத்தையும் வீசினார். இரண்டையும் வீசும்போது மனம் ஒரே மாதிரியாக இருந்தது. அவரைப் பொறுத்தவரை பணமும், மண்ணும் ஒன்றுதான். ஒருநாள் விவேகானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரை சோதித்தறிய அவர் இல்லாதபோது அவரது படுக்கையின் கீழே சிறிது ரூபாய் நாணயங்களை வைத்தார். ராமகிருஷ்ணர் தனது படுக்கையில் வந்து உட்கார்ந்தார். உட்கார்ந்தவர் ஏதோ மின்சாரம் பட்டு அதிர்ச்சியடைந்தவர் போல் எழுந்து படுக்கையை உதறினார். படுக்கையின் கீழே இருந்த நாணயங்கள் விழுந்தன. ஆம், ராமகிருஷ்ணருக்கு பணத்தைத் தொட்டாலே தேள் கொட்டியது போலாயிற்று. ஸ்ரீராமகிருஷ்ணர் பணத்தை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை . பணத்திடம் பற்று கொண்டவர் களையும், பணம் படைத்தவர்களையும் அவர் பாராட்டவில்லை .
வாழ்வதற்காகத்தான் செல்வம் கடவுளால் தரப்படுகிறது. செல்வத்துக்காக வாழ்வதில் அர்த்தமில்லை என்பது அவர் கருத்து.

இன்று ஸ்ரீ ராமகிருஷ்ணர் நினைவு தினம்