132 கிராமங்களில் 3 மாதங்களாக பெண் குழந்தைகளே பிறக்கவில்லை – விசாரணைக்கு உத்தரவு

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 132 கிராமங்களில் மொத்தம் 216 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் ஒரு பெண் குழந்தைகூட பிறக்காதது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மாவட்ட நிர்வாகத்தை அதிரச்செய்துள்ளது.
மத்திய அரசு பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு படிப்பை வழங்கவும் திட்டங்களை முன்னெடுக்கிறது. பெண் குழந்தைகளின் பாலிய விகிதத்தை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவு கவலையளிப்பதாக உள்ளது. இதற்கு மத்தியில் 132 கிராமங்களில் பெண் குழந்தைகளே பிறக்காத விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது. மாவட்ட மாஜிஸ்திரேட் அசிஷ் சவுகான் பேசுகையில், “இப்பகுதியில் பெண் குழந்தைகளே பிறக்கவில்லை என்பதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இப்பகுதியில் இப்படியொரு தாக்கத்திற்கான காரணம் என்னவென்று ஆய்வை மேற்கொள்கிறோம், கண்காணிக்கிறோம். இதுதொடர்பாக ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்,” எனக் கூறியுள்ளார்.