100 கோடி அவதூறு வழக்கு

பாரத மருந்து நிறுவனமான பாரத் பயோடெக் மற்றும் அது உருவாக்கிய கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் ஆகியவற்றுக்கு எதிராக வெளியிடப்பட்ட 14 கட்டுரைகளை வெளியிட்டது இடதுசாரி செய்தி இணையதளமான ‘தி வயர்’. இதனையடுத்து அந்த செய்தி நிறுவனத்தின் ஆசிரியர்கள் மற்றும் இழிவுபடுத்தும் கட்டுரைகளை எழுதிய எழுத்தாளர்கள் மீது ரூ. 100 கோடி கேட்டு அவதூறு வழக்குகுத் தொடர்ந்தது பாரத் பயோடெக் நிறுவனம்.  இவ்வழக்கை விசாரித்த தெலுங்கானா நீதிமன்றம், ‘தி வயர் இணையதளத்தில் இருந்து குறிப்பிட்ட அந்த 14 அவதூறான கட்டுரைகளையும் 48 மணி நேரத்திற்குள் நீக்க உத்தரவிட்டது. மேலும், தி வயர், அதன் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மற்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றவர்கள் பாரத் பயோடெக் தொடர்பான எந்த அவதூறான கட்டுரைகளையும் வெளியிடக்கூடாது’ என்றும் உத்தரவிட்டுள்ளது.