ஹைதாராபாத் தேர்தலும் பா ஜ க வின் முனைப்பும்

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த ஹைதாராபாத் மாநகராட்சியின் தேர்தல் முடிவுகள் பல ஆச்சரியங்களை தந்துள்ளது. .இந்த தேர்தலில்  மிக குறைந்த அளவு குறிப்பாக 46% வாக்காளர்களே வாக்களித்து இருந்தனர்.அதிலும் முஸ்லிம்கள் பெருபான்மையாக உள்ள பழைய ஹைதாராபாத்தில்  முந்தய நிஜாமின் ஆதரவு படைவீரர்களின் அமைப்பான ராசாக்களின் அகில இந்திய முஸ்லிம் மஸ்லின் கட்சியும் பா ஜ க வும் பெரும்பாலான இடங்களில் நேரடி போட்டியை சந்தித்தது. மீதமுள்ள இதர செகந்திராபாத்  உள்ளிட்ட புறநகர் இடங்களில் முதல்வர்  சந்திரசேகர ராவ்வின் கட்சிக்கும் பா ஜ கவிற்கும் கடுபோட்டி நிலவியது.

இத்தனைக்கும் சென்ற மாநகராட்சி தேர்தலில் பா ஜ க வாங்கிய ஓட்டு சதவிகிதம் வெறும் 5% அளவுக்குத்தான். கடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த எதிர்ப்பும் இன்றி தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த தெலுங்கான ராஸ்ட்ரிய சமிதிக்கு தற்போது சரியான மற்று கட்சியாக பா ஜ க கட்சி உருவெடுத்துள்ளது. கடந்த தேர்தலில் முஸ்லிம் மஸ்லின் கட்சியுடன் நேரடியாக கூட்டணி வைத்து போட்டியிட்ட ராவ் தற்போது நட்பு ரீதியிலான விட்டு கொடுப்பு அல்லது டம்மி வேட்பாளர்களை நிறுத்தி இருவர் கூட்டணியும் வெற்றி பெற உதவியுள்ளார். ஆளும்கட்சி தனது முந்தய எண்ணிக்கையான99ல் இருந்து 56க்கு சறுக்கியுள்ளது . அதன் கூட்டணி கட்சியான ஒவைசியின் முஸ்லிம் மஸ்லின் கட்சியும் தனது பங்கிற்கு 43இடங்களை கைப்பற்றியுள்ளது.

பா ஜ க  கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சிக்கு கடுமையான போட்டியை கொடுத்ததன் மூலம் நான்கு இடங்களை வென்றது . அதிலும் ஒரு தொகுதியில் சந்திர சேகர ராவ்வின் மகளான கவிதாவை மண்ணை கவ்வ செய்தது.அதே முனைப்புடன் சென்ற மாதம் கடைசியில் நடந்த  இடைதேர்தல் ஒன்றில் மும்முனை போடடியில் பா ஜ க வென்றதன் மூலம்  தனது இருப்பை காட்டியது..இந்நிலை.யில்  ஹைதாராபாத்தில் மாநகராட்சிக்கு நடந்த தேர்தளிலும் வெற்றிவாகை சூடியுள்ளது. .சென்ற மாநகராட்சி தேர்தலில் வெறும் நான்கு இடங்களை பெற்றிருந்த பாஜக இந்த முறை 44 இடங்களை கைப்பற்றயுள்ளது இது அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பா ஜ க வின் அகில இந்திய தலைவர்களும் போட்டி போட்டு கொண்டு இந்த தேர்தலில் வேலை செய்ததன் விளைவு நாலில்இருந்து நாற்பதெட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறது.இந்த தேர்தல் முடிவு  ஆளும் கட்சிக்கு கொடுத்துள்ள எச்சரிக்கை . கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு  நல்லமுறையில் .மக்கள் பனி செய்வதை விட்டு விட்டு வாஸ்துவிலும்  இலவசங்களிலும் கவனத்தை செலுத்தி ஓட்டுபெற்றுவிடலாம் என்று எண்ணாமல் உண்மையில் மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து செயல்பட முன்வரவேண்டும். பா ஜ கவுக்கும் தென்மாநிலங்களில் கர்நாடகாவுக்கு அடுத்தபடியாக ஆட்சியை பிடிக்கும் நிலையில் தெலுங்கானா மாநிலம்  உள்ளது என்பது சமிபத்திய தேர்தல் முடிவுகள் எடுத்துரைக்கிறது.  . அதற்கான முயற்சியில் மாநிலத் தலைமையும்  மேலிட தலைவர்களும் முனைவார்கள் என்பது திண்ணம்.

இனி தெலுங்கான ராஸ்ட்ரிய சமிதி கட்சிக்கு இறங்கு முகம்தான். இதுவரை தெலுங்கானாவில் ஆளும்கட்சிக்கு எதிரிகளை தேடவேண்டியிருந்தது தற்போதுஅது பா ஜ க வடிவில் உருவெடுத்துள்ளது.  காங்கிரஸ்அய்யோ பாவம் நிலையில் உள்ளது இந்த தேர்தலில் தனது வெற்றிபெற்ற  உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்ததுடன் வாக்கு சதவிகிதத்தையும் இழந்துவிட்டது  கடைசியாக இந்த தேர்தல் முடிவுகளில்இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றல் பாஜக தென்னகத்திலும் வலுவாக காலுன்றிவிட்டது என்பதுதான்.முதலில் கர்நாடகாவை கைப்பற்றியது . தற்போது தெலுங்கானாவில் வீருகொண்டு எழுந்துள்ளது  அடுத்து கண்டிப்பாக கேரளாவிலும் வெற்றி கணக்கை துவங்கியாகிவிட்டது.. நடந்துமுடிந்த  இடைதேர்தல்களில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல்களிலும் அது எதிரொலிக்கும். கடைசியில் தமிழ்நாட்டிலும் பாஜக வேரூன்றி விட்டது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.அதைத்தான் எல் முருகனின் வேல் யாத்திரைக்குகிடைத்த வரவேற்பில் உணர்ந்தோம் .