கேரள மக்களின் எதிர்ப்பு

கட்டாய மதமாற்றம் என்பது தேசபாதுகாப்புக்கு அச்சுறுத்தல். அது உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டியது அவசியம். கேரளாவில் கிறிஸ்தவ பெண்கள் பலர் லவ்ஜிகாத்தால் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிலர் பயங்கரவாதத்தில் ஈடுபடுத்தப் பட்டனர். இவ்வகை மதமாற்றம் நடப்பதை அங்குள்ள கிறிஸ்தவ அமைப்புகளே ஒப்புக் கொண்டுள்ளன. லவ்ஜிகாத் பிரச்சனையை முதலில் உச்ச நீதிமன்றம் வரை கொண்டு சென்றதும் கேரளாதான். மதமாற்ற தடைசட்டத்தை சில மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளன. பல மாநிலங்களில் அதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன. தற்போது கேரள ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் கேரளாவிலும் இந்த சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். பா.ஜ.க மாநில பொது செயலாளர் ஜார்ஜ் குரியனும் இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.