ஹிந்து விழிப்புணர்வு

சமீபத்தில் தி.மு.கவின் ஆதரவாலர்களான கருப்பர் கூட்டம் கந்தசஷ்டியை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டது. இதற்கு ஹிந்துக்கள் பலத்த கண்டனம் தெரிவித்திருந்தனர். தற்போது கந்தபுராணத்தில் வரும் ‘வான்முகில் வழாது…’ என்ற பாடலை மாற்றியமைத்து தன் கட்சி பாடலாக்கியுள்ளது தி.மு.க. இதற்கு காமாட்சிபுர ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி, இது தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோல ‘நாகர்கோயில் திருத்தொண்டர்கள் சபை’ கூட்டத்தில் ஹிந்துக்களை வஞ்சிக்கும் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்துர் திருப்பாவை முற்றோதல் விழாவில் பேசிய செண்டரலங்கார ஜீயர், ஹிந்துக்களை பழிப்பவர்களுக்கு ஓட்டு இல்லை என உறுதி ஏற்க வேண்டும். சித்திரை மாதம்தான் புத்தாண்டை கொண்டாட வேண்டும், கலாச்சாரம், தர்மம், ஆகமங்களை மறக்கக்கூடாது. ஆண்டாளை நிந்தித்தவர்கள், ஹிந்து கலாச்சாரத்தை பழிப்பவர்கள், நெற்றியில் பூசிய விபூதியை அழிப்பவர்கள் ஹிந்து விரோதிகள். அவர்களை நாம் நிராகரிக்க வேண்டும் என பேசியுள்ளார்.